ஊட்டியும் அவஸ்த்தையும்… செம ப்ரஸ்ர்ல ஊர்ல இருந்து வந்ததுமே நல்ல ரிலீப்பா இருந்தது சரி ஒரு ட்ரிப் போடுவோம்ன்னு நானும் அண்ணாரும் ப்ளேன் போட்டோம் அதுவும் குடும்பத்தோட.. சனிக்கிழமை இரவு ப்ளன் A ப்ளேன் B ன்னு இரெண்டு ப்ளேன்.. குன்னூர்ல சின்ன வேலை அப்படியே ஊட்டி முதுமலை ,
குன்னூர் போய்ட்டு வந்து இன்னும் சிலரோடு சேர்ந்து மூணார் இடுக்கி , கடைசியா மற்றவர்கள் சொதப்ப ப்ளேன் A டிக் செய்தோம் தேடி தேடி இரெண்டு resort ஞாயிறு காலையில டிக் செய்தோம், ஒன்னு சேரிங் கிராஸ் பக்கத்துல இன்னொன்னு 10கிமீ தூரத்துல,
போட்டோவை பார்த்து காலை உணவோட அவன் கொடுத்த விலையும் புடிக்க 10KM தள்ளி இருக்க resortக்கு advance செய்துட்டு 10பேர் 2கார் ஒன்னு ஓசி கார் 😀 என மதியம் பயணம் தொடங்கியது என் கார் புல்லா பசங்க வேற காரல எங்க தேவதைகள் அந்த தேவதைகள் 2வது ஹேர் பின் bendலையே மதிய உணவை கக்க ஆரம்பித்தார்கள்
மலைகளின் அரசியின் நெளிவு வளைவுகளில் மிதந்த எங்க கார்க்கு காட்டேறியில் நின்றது பேலட்ல புகை 1மணி நேரம் பேலட்டை தொறந்து வெச்சு சூட்டை தணித்துவிட்டு மீண்டும் 8கிமீ மேல போக குன்னூர் வந்தது friend க்கு போனை போட்டு வண்டிகதையை சொல்ல அங்க ஒரு மெக்கானிக்ட வண்டிய கொடுக்க சொன்னார்
கொடுத்துட்டு சொந்தகாரங்க வூட்டுக்கு போய் சாப்பிடும் போது மணி 10 சாப்பிட்டு ஒரு டிரவல்ஸ் வண்டியை புடிச்சுட்டு நாங்களும் எங்களை பின் தொடர்ந்து ஒரு காரும் நகர்ந்தது, குன்னூர் தாண்டும் போது சிறு சிறு துளியாய் மழை பெய்திட ஊட்டிக்கு முன்பு அடமழையானது ஊட்டியை தாண்டினோம்
கல்லாறு செல்லும் வழியில் 10KM போகனும் சின்ன சின்ன கிராமங்கள் அடமழை மெதுவாக ஒரு 6 KM போயிருப்போம் மண் இறங்கி சேறு சிறதாக இருந்தது ட்ரைவர் லைட்ட சிக்குது போயிடலாம் என கடந்தோம் அங்க இருந்து 1km கடந்ததும் 4பசங்க இறங்கி நின்னுட்டு இருந்தாங்க இதுல போகாதீங்க என்றனர்
இறங்கி பார்த்தா கொஞ்சம் பெரிய மண் சரிவு ஓரத்திலையும் சேறுன்னு uturn போட்டா முன்னாடி லைட்டா மாட்டின சேறு இப்ப நிறைஞ்சுடுச்சு வண்டி நகரலை முன்னாடியும் போக முடியாது பின்னாடியும் போக முடியாது இரவு 12மணி ஆகிடுச்சு லாரி ஒன்னு வந்தது அவர் அந்த பசங்க நின்ன சேற்றை கடக்க உதவினார்
மீண்டும் resort நோக்கி நகர அடுத்த 1/2 கிமீ ல நீளமாக சேறு லாரியே தத்தளிச்சது மழை வேற கொட்டுது, வண்டியை ஓரமா பார்க் செய்து லேடிஸ் லாரில ஏத்தி விடுவோம் நாம பின்னாடி போகலாம்ன்னு முடிவு செய்து பார்க் செய்தோம் அப்ப ஒரு ஜீப் ஆட்களை ஏற்றி வர அவர் எளிதில் கடந்தார் இந்த சேற்றை
அதே வழித்தடத்தில் நாங்களும் காரை விட்டோம் அந்த சேற்றை கடந்தோம் போன ஜீப் அடுச்சு புடுச்சு திரும்பி வந்தான்.. அங்க வண்டியளவிற்கு சேறு போகவே முடியாது என்று சொல்ல resort க்கு போகும் எண்ணத்தை விட்டு ஊட்டிக்கு திரும்ப போக ஏதவது வழி இருக்க கேற்க என் பின்னாடியே வாங்க என்றார் ஜீப்காரர்
லாரிக்காரண்ணாக்கு தேங்ஸ் சொல்லிட்டு இந்த வண்டி பின்னாடி போக ஏதோ ஒரு வழியில கூடலூர் ரோடு கொண்டு வந்து விட்டார் மீண்டும் நன்றியை சொல்லி ஊட்டிக்கு கிளம்பறோம், ஆனால் எங்க தங்குவது 🤔 எல்லோரும் தெரிஞ்சவுங்களுக்கு அந்த இரவு 2மணிக்கு போன் போட்டு கேட்க நான் என்ன செய்ய🤔
காலையில enquire செய்த மற்றொரு resorts க்கு கால் செய்தேன் தூக்க மப்புள பேசினார் நாளைக்கு நைட் ரூம் கன்பார் என்றார், நான் இப்ப வேணும் எனலறேன் ஒரு 5நிமிஷம் என்றார், தூக்கம் முழுவதும் களைத்துவிட்டு மீண்டும் பேசினார் நடந்ததை விளக்கி ஹெல்ப் வேணும் என்றேன்.
ஒரே ஒரு ரூம் இருக்கு குழந்தை familyன்னு சொல்றீங்க அங்க போய் படுத்துக்கங்க மத்ததையெல்லாம் காலையில பேசிக்கலாம் காசுகூட எவ்வளவுன்னு சொல்லலை, ஒரு வழியா அங்க சேர்ந்தும் பேசினவர் இல்லை சர்வன்ட் ரூம் ஓபன் செய்து ப்ளங்கட், தலையணை என மாணவரிக்கு கொடுத்தார், அந்த சின்ன ரூம்ல 10பேரும்
படுத்து தூங்கினோம் ஒரு வழியா.. காலையில 9’o clock நைட் பேசினவர் வந்தார் கலேஜ் பையன் எப்படி பத்து பேர் இதுல படுத்தீங்க என்றார் 😳 அப்புறம் வேற ரூம் 1மணிக்கு ரெடியாகும் வேற ஏதாவது கிடச்ச அங்க போங்கணா என்றார், இல்லப்பா இங்கையே இருக்கோம்ன்னு 2ரூம் ரேட் பேசி வங்கிகிட்டோம்.
நைட் stay செய்ததற்கு 30% தான் போட்டார். மதியத்திற்கு மேல டூரை தொடங்கினோம்.. இவ்வளவு நல்ல மனிதர்கள் லாரிகரார் மழையில் முழுவதுமாய் நிணைந்து உதவி செய்தார், ஜீப் காரர், அப்புறம் படுத்து தூங்குங்க அப்புறம் பேசுவோம் என்ற சஞ்சய் (resort தம்பி) Taxi driver சந்தோஷ்
பாவம் புல் நைட் ஒன்னு ஆகாது பயப்படாதீங்க என ஆறுதலோடே அத்துணையிடத்திலும் இறங்கி நின்றார் என கஷ்டத்தில் நல்லவர்களை காண இயலும் ❤️❤️ @imthattaan @gurunaatha @Bibliophile2021 @iam_nithankrish @kovai_nazar @narsimp @skpkaruna @V_Kishore1 @bharath_kiddo @mukil1123


