வெள்ளி தான் அடுத்த தங்கம்! #PoorMansGold #NewGOLD வெள்ளியில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என்பதற்கான 4 முக்கிய காரணங்கள். #MyKeyReasons 👇🧵 1️⃣ தங்கம்-வெள்ளி விகிதம் (GSR) - Ratio 2️⃣ இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு - Rupee Depreciation 3️⃣ விண்ணை முட்டும் Industrial தேவை
1) GSR - GOLD SILVER RATIO தங்கம்-வெள்ளி ரேஷியோ... என்ன அது? சிம்பிளா சொல்லணும்னா, எத்தனை கிராம் வெள்ளி கொடுத்தா ஒரு கிராம் தங்கம் வாங்க முடியும்னு சொல்ற கணக்கு தான் இது. Andha காலத்துல எல்லாம், ஒரு 40-50 கிராம் வெள்ளி கொடுத்தாலே, ஒரு கிராம் தங்கம் வாங்கிடலாம். அதுதான் அதோட
இந்த விகிதம் அதன் சராசரியை நோக்கித் திரும்பும் (Mean Reversion). Appdina? அது ஒண்ணுமில்ல பாஸ்... ஒரு ரப்பர் பேண்ட்டை ரொம்ப தூரம் இழுக்குறீங்கன்னு வச்சுக்கோங்க. விட்டா என்ன ஆகும்? 'சர்'னு பழைய இடத்துக்கே வேகமா திரும்பி வரும்ல? அதுதான் 'மீன் ரிவர்ஷன்' (Mean Reversion). வரலாத்துல
வெள்ளி என்ன கொலுசுக்கு மட்டும்தானா? அங்கதான் பெரிய ட்விஸ்ட்டே இருக்கு! வெள்ளி இப்போ வெறும் நகை பொருள் இல்ல. அது ஒரு இண்டஸ்ட்ரியல் மெட்டல் (Industrial Metal). 1. Solar Panel: உலகமே பசுமை ஆற்றலுக்கு மாறுது. எல்லா சோலார் பேனல்லையும் வெள்ளி கண்டிப்பா வேணும். 2. எலெக்ட்ரிக் கார்
அரசாங்கமும் RBI-யும் இப்ப வெள்ளியைக் கவனிக்க ஆரம்பிச்சிட்டாங்க! இதுதான் முக்கியமான பாயின்ட். உலகத்துல இருக்கிற பெரிய பெரிய நாட்டு அரசாங்கங்கள் எல்லாம், தங்கத்தை மட்டும் நம்பி இல்லாம, அதுக்கு அடுத்தபடியா வெள்ளியையும் ஒரு பாதுகாப்பு சொத்தா (secondary hedge) paaka
இதுவரைக்கும் நீங்க பேங்குக்கு போனீங்கன்னா, உங்க தங்க நகை, தங்கக் கட்டி, தங்க நாணயத்தை மட்டும்தான் அடமானம் வெச்சு உடனடியா லோன் (Gold Loan) வாங்க முடியும். நீங்க ஒரு கிலோ வெள்ளி கொலுசையோ, பாத்திரத்தையோ கொண்டு போய் கொடுத்தா, "இதெல்லாம் வெச்சு லோன் தர முடியாதுங்க"னு சொல்லிடுவாங்க.
இந்த வருஷம், அதாவது 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்துதான் இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தீவிரமாகியிருக்கு. குறிப்பா சொல்லணும்னா, 2025-ன் முதல் காலாண்டில் (January - March) நிதி அமைச்சகம் மற்றும் RBI அமைத்த சில உள்-குழுக்களின் (internal committees) அறிக்கைகள்ல தான் வெள்ளியை
அதன்பிறகு, கடந்த சில மாதங்களா நிதித்துறை வட்டாரங்கள்ல வெள்ளியை அடமானம் வைக்க அனுமதிக்கிறது (pledging) pathi pesitu irukaanga. சரிண்ணே, நாம கதை பேசினது போதும். இப்ப கொஞ்சம் கணக்கு போட்டுப் பாப்போம். அப்போதான் விஷயம் எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்குன்னு தெரியும். ok?
தங்கம்-வெள்ளி ரேஷியோ (GSR): இப்போ 85-ல இருக்கு (அதாவது 85 அவுன்ஸ் வெள்ளி = 1 அவுன்ஸ் தங்கம்). நம்ம டார்கெட் ரேஷியோ: இது பழையபடி சராசரியா 50-க்கு வரணும். தங்கம் விலை (2036 கணிப்பு): 2036-ல ஒரு அவுன்ஸ் தங்கத்தோட விலை $5,200 டாலர் இருக்கும்னு ஒரு கணக்குல வச்சுப்போம். இன்றைய
ரேஷியோ மாறுனா மட்டும் வெள்ளிக்கு எவ்வளவு லாபம்? இப்போ இருக்கிற 85 ரேஷியோ, நம்ம டார்கெட்டான 50-க்கு வரணும்னா என்ன ஆகணும்? 85÷50=1.7 அப்படின்னா, தங்கம் விலை அப்படியே இருந்தாலும் சரி, வெள்ளி விலை மட்டும் தனியா 70% ஏறி ஆகணும்! அப்போதான் அந்த ரேஷியோ கணக்கு சரியா வரும். இது முதல்
2036-ல தங்கம் விலை one ounce $5,200 (estimates), ரேஷியோ 50-ன்னு வச்சா... 5,200÷50=$104 அப்போ, 2036-ல ஒரு அவுன்ஸ் வெள்ளியோட விலை $104 டாலர் இருக்கும் அதை நம்ம ஊரு ரூபாய் கணக்குக்கு மாத்துவோம் வாங்க! இங்க தான் கேம் இருக்கு. ரெண்டு விஷயத்தை கவனிக்கணும்:
டாலர் மதிப்பு: நம்ம ரூபாய் மதிப்பு வருஷத்துக்கு ஒரு 4% கம்மியாகுதுன்னு வச்சா, 2036-ல ஒரு டாலரோட மதிப்பு ₹136 ரூபாயா இருக்கும். அவுன்ஸ் கணக்கு: ஒரு அவுன்ஸ்னா 31.1 கிராம். இப்போ கணக்கு போடுவோம்: முதல்ல, ஒரு கிராம் வெள்ளியோட விலையை டாலர்ல பாப்போம்: 104÷31.1 கிராம்≈$3.34 டாலர்.
இதைக் கணக்கு பண்ணிப் பாத்தா, நீங்க வெள்ளில போடுற முதலீடு, வருஷா வருஷம் சராசரியா 11.1% கூட்டு வட்டியில வளர்ந்த மாதிரி இருக்கும்! பேங்க் FD-யை விட இது கிட்டத்தட்ட ரெண்டு மடங்கு அதிகம்! This is bare minimum!
தங்கத்துல முதலீடு பண்றது புத்திசாலித்தனம் தான். ஆனா வெள்ளியை இப்ப கவனிக்காம விடுறது அதைவிட பெரிய தப்பா இருக்கலாம். அமைதியா இருந்துட்டு, டைம் வரும்போது அடிக்குற ஆள் மாதிரி வெள்ளி! ஒரு கண்ணு வெச்சுக்கோங்க!
Gold vs Silver, முதலீடு செய்யும் முறைகள், இரண்டின் உலகளாவிய தேவை (demands), மற்றும் வெள்ளி சுரங்கங்கள் (silver mining) பத்தி பேசுறதுக்கு நான் காத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது solren, நாம அதைப்பற்றி விரிவாகப் பேசலாம்.
@MetaMudhaleedu Physical,bees,etf எதுல பண்ணலாம்னும் சொல்லிருக்கலாம்
@MetaMudhaleedu Good information 👍
@MetaMudhaleedu Sir one doubt, do you mean silver coins or silver shares?
